தமிழ்நாடு

அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் அதிரடி கைது

Published On 2022-11-05 15:30 IST   |   Update On 2022-11-05 15:31:00 IST
  • கூடுதலாக கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக மருதைவீரன் குளித்தலை போலீசில் புகார் செய்தார்.
  • கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வடசேரி ஊராட்சி பாலசமுத்திரம்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவர் குளித்தலை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மருதைவீரன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணத்தை 10 பைசா வட்டிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கான வட்டியினை மாதந்தோறும் அவர் கொடுத்து வந்தார்.

இதற்கிடையே மீண்டும் கூடுதலாக கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக மருதைவீரன் குளித்தலை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி வழக்குப் பதிவு செய்து இன்று அதிகாலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமியை கைது செய்தனர்.

பின்னர் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பழனிச்சாமியை குளித்தலை கிளைச்சியைில் அடைத்தனர். இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News