தமிழ்நாடு

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி தலையில் கல்லை போட்டு கொலை- கணவரை கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2023-09-05 11:56 IST   |   Update On 2023-09-05 11:56:00 IST
  • ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார்.

மேலூர்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த கலா (45) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் பொட்டி, கூடை முடையும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இதற்காக அவர்கள் கருங்காலக்குடியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரு காலியிடத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்தனர். நல்லையனுக்கு குடிப்பழக்கமும் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு தம்பதியினர் தூங்க சென்றனர். நள்ளிரவில் திடீரென்று எழுந்த நல்லையன் மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் கலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கலா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகர், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்த கொலையுண்ட கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நல்லையனை கைது செய்து, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கருங்காலக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News