தமிழ்நாடு

இன்னும் 8 தினங்கள் வரை இரவில் குளிர் நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2023-01-07 12:29 IST   |   Update On 2023-01-07 12:29:00 IST
  • அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும்.
  • ஜனவரி நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகர தொடங்கும்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த 2 தினங்களாக லேசான மழையும் காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஜனவரி மத்தி வரை அதாவது 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, 'ஜனவரி நடுப்பகுதியில் இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகர தொடங்கும். இது இரவு வெப்ப நிலையை குறைக்கலாம். அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழையை எதிர் பார்க்கலாம். அதன் பிறகு வறண்ட வானிலை இருக்கலாம்' என்றனர்.

Tags:    

Similar News