தமிழ்நாடு
பேருந்தில் சீட் பிடிப்பதற்காக அரிவாளை போட்ட நபர்கள் - பொள்ளாச்சியில் பரபரப்பு
- பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம்.
- பேருந்து இருக்கையில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - கோபாலபுரம் இடையேயான அரசு பேருந்தில் 2 சீட்களில் இடம்பிடிப்பதற்காக 2 அரிவாள்களை வைத்த நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம். ஆனால் இருக்கையில் கர்ச்சீப்புக்கு பதில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
5C தடம் எண் கொண்ட பேருந்தில் அரிவாள்கள் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.