தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும்- பதிவுத் துறை
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
- விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்றும், நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதாக தமிழக அரசு அனுமதித்துள்ளது.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம் சேர்த்து வசூலிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.