திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
- பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
- இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரெயிலில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சதீஸ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக, திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.