தமிழ்நாடு
தெரியாமல் ஸ்கூட்டரின் ஆக்ஸிலேட்டரை திருகிய 4 வயது குழந்தை உயிரிழப்பு
- குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே ஸ்டார்ட் செய்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, தெரியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை வாகனத்தில் நிற்கவைத்துவிட்டு, குழந்தையின் தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.