தமிழ்நாடு
துணை முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்
- நாதக நிர்வாகிகள் விலகி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் 12 பேர் விலகியுள்ளனர்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
பெரியார் குறித்து சீமான் பேசியது மேலும் அதிருப்தியை உருவாக்கி மேலும் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து சுமார் 3000 நிர்வாகிகள் விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியுள்ளனர்.
அதன்படி, அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.