தமிழ்நாடு

பழுதான தீயணைப்பு வாகனத்தை தள்ளி சென்ற வீரர்கள்

Published On 2023-05-26 14:25 IST   |   Update On 2023-05-26 16:12:00 IST
  • தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
  • தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கலைஞர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. அந்த தீயணைப்புத்துறையினரின் வாகனம் பழுது ஏற்பட்டது.

தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.

அதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

மேலும் தீயணைப்பு துறையினர் வாகனத்தை தள்ளி செல்லும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பாணியில் வடிவேலு காமெடி போன்ற ஆ... தள்ளு... தள்ளு... போன்று சினிமா காமெடி வசனத்துடன் எடிட் செய்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News