மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை நீட்டிப்பு- போலீஸ் கமிஷனர் உத்தரவு
- மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் தொடர்ச்சியாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் பலர் காயம் அடைந்து உடல் ஊனம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க போலீஸ் கமிஷனர் தடை விதித்தார். இதையும் மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சாவுக்கு நேற்று (2-ந்தேதி) முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை 60 நாட்கள் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.