தமிழ்நாடு
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி- பிரேமலதா
- பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். நேற்று பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தள்ளார்.