தமிழ்நாடு
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
- மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.
திருப்போரூர்:
மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, வண்டலூர் சாலை, செங்கல்பட்டு சாலை பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தீவிர துப்புரவு பணி நடைபெற்று வருகிறது.
இதனை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆய்வு செய்தார். அவர் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில் நடைபெற்ற பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அப்போது திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, லாவண்யா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.