தமிழ்நாடு
தொழில்நுட்ப கோளாறு: தாம்பரம்-கடற்கரை மின்சார ரெயில் சேவை பாதிப்பு
- கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் தான் அதிகளவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- மின்சார ரெயில் கோடம்பாக்கம் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது.
சென்னை:
கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் தான் அதிகளவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மக்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். இன்று காலையில் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்டு வந்த மின்சார ரெயில் கோடம்பாக்கம் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது.
மின்சார ரெயிலில் இருந்து மின் வழித்தடத்தை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டு நின்றதால் சிறிது நேரம் சேவை பாதித்தது. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் வந்து அதனை சரி செய்தனர். இதையடுத்து மின்சார ரெயில் சேவை தொடங்கியது.