தமிழ்நாடு

அலங்காநல்லூர் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் மரியாதை

Published On 2022-11-30 17:36 IST   |   Update On 2022-11-30 17:36:00 IST
  • ஆதனூர் கிராம முத்தாலம்மன் கோவில் காளை நேற்று மாலை திடீர் உடல்நல குறைவால் இறந்தது.
  • ஊர் கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த காளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராம முத்தாலம்மன் கோவில் காளை நேற்று மாலை திடீர் உடல்நல குறைவால் இறந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா முதல் கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளது. ஊர் கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த காளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காளையின் உடலுக்கு சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகைதந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று மாலை ஊர் கோவிலுக்கு அருகே காளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Similar News