தமிழ்நாடு

தந்தையர் தினத்தில் மகனை கல்லால் தாக்கி கொன்ற தந்தை

Published On 2022-06-19 12:10 IST   |   Update On 2022-06-19 12:10:00 IST
  • மாமியார் வீட்டுக்கு குழந்தையை பார்க்க சென்றார்.
  • கண் போல் காக்க வேண்டிய குழந்தையை தந்தையே கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). இவர் தனது உறவினரான நவீனாவை காதலித்து திருமணம் செய்தார். நவீனா கர்ப்பமான நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் தனது கணவனை பிரிந்து ராயப்பன்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு நவீனா சென்று விட்டார்.

அங்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இருந்தபோதும் கோபத்தில் இருந்த நாகராஜ் மகனை பார்க்க வரவில்லை. பின்னர் சமாதானம் அடைந்த அவர் மாமியார் வீட்டுக்கு குழந்தையை பார்க்க சென்றார்.

அங்கு மனைவி நவீனாவுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கல்லை எடுத்து நவீனாவை நோக்கி வீசினார். அந்த கல் அவரது கையில் இருந்த ஒரு மாத பச்சிளம் குழந்தை மீது பட்டது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்தது. கண் போல் காக்க வேண்டிய குழந்தையை தந்தையே கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இல்லையொரு பிள்ளை என ஏங்குவோர் பலர் இருக்க பெற்ற பிள்ளையை தந்தையே வரதட்சணைக்காக காவு கொடுத்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று தந்தையர் தினம் கொண்டாடும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News