தமிழ்நாடு

தூவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


உடுமலை அருகே தூவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2022-07-18 11:19 IST   |   Update On 2022-07-18 11:19:00 IST
  • மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சிறு, சிறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது தூவானம் அருவி. தற்போது தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூர், காந்தலூர், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழையால் தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சிறு, சிறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News