தமிழ்நாடு
நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1,14,59,000 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.
காலை உணவுத் திட்டம் மூலம் 17,53,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.