தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ரெயில் பெட்டி அருகே சுற்றித்திரிந்த 899 பேர் மீது வழக்கு
- ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் தனியாக பயணம் செய்த கர்ப்பிணி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ரெயில்வே மற்றும் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பெண்கள் பெட்டி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 899 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தெரிவித்தார்.