தமிழ்நாடு
VIDEO: மெரினா கடற்கரையில் 'நீங்கள் கணவன் மனைவியா?' என பெண்ணிடம் கேட்ட காவலர் பணியிட மாற்றம்
- பெண்ணிடம் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது.
- ரோந்து காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவரிடம், 'நீங்கள் தம்பதியா?' என கேட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவலர் 'நீங்கள் கணவன் மனைவியா?' என கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனை சம்பந்தப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.