தமிழ்நாடு (Tamil Nadu)

விக்கிரவாண்டியில் 60அடி அகலத்தில் தமிழக வெற்றி கழக மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2024-10-08 06:43 GMT   |   Update On 2024-10-08 06:43 GMT
  • கட்சி தலைவர் விஜய் தங்க தனி அறைகளும், வி.ஐ.பி.,கள் தங்க தனி அறைகள் ஏற்பாடு செய்யப்படஉள்ளது.
  • இடை இடையே மழை பெய்து வருவதால் பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27 -ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 4-ந் தேதி பந்தக்கால் நடும் விழா நடந்தது.

மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிக்கு சென்னை திருவேற்காடு ஜே.பி., பந்தல் அமைப்பாளர் விஸ்வநாதன் ஒப்பந்தம் செய்து பணியை தொடங்கியுள்ளனர். மாநாட்டு திடலில், மாநாட்டு மேடை கிழக்கு நோக்கி, ரெயில்வே தண்டவாளத்திலிருந்து 200 மீட்டர் தள்ளி, இரும்பு பைப்புகளை இறக்கி பணியை தொடங்கி உள்ளனர்.

ரெயில்வே பாதையின் அருகே கட்சியினர் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேடை 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு அமைகிறது.

மேடையில் கட்சி தலைவர் விஜய் தங்க தனி அறைகளும், வி.ஐ.பி.,கள் தங்க தனி அறைகள் ஏற்பாடு செய்யப்படஉள்ளது. தற்பொழுது பந்தல் அமைக்கும் பணியாளர்கள் தங்க தனி ஷெட் அமைத்துள்ளனர்.

அவர்கள் சமைக்க தனியாக ஷெட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்கள் நினைக்கும் சமயத்தில் உணவருந்த மாநாட்டு திடல் முழுவதும் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. திடலினுள் இருக்கும் கிணறுகளை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்ததுடன் முழுவதையும் இரும்பு தகரம் கொண்டு மறைக்க உள்ளனர் . திறந்த வெளியில் மாநாடு நடத்த முடிவு செய்து பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இடை இடையே மழை பெய்து வருவதால் பணியில் சற்று தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News