தமிழ்நாடு

விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அதிகாரிகள் 14-ந்தேதி சென்னை வருகை

Published On 2025-03-12 08:04 IST   |   Update On 2025-03-12 08:04:00 IST
  • விஜய்க்கு ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
  • நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

சென்னை:

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி சென்னை வருகின்றனர்.

அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

Tags:    

Similar News