தமிழ்நாடு
த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
- முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார்.
- தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.
வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியுள்ளது.