தமிழ்நாடு
சென்னை கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிப்பு.
- ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செல்ல முடியாமல் இருப்பதால், பயணிகள் சிரமம்.
சென்னை, கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிப்புக்கு உள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செல்ல முடியாமல் இருப்பதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.