மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு குற்றச்சாட்டு- நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்
- அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு.
- தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன.
மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு!
இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள் இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.