தமிழ்நாடு

வைகோ நலமுடன் உள்ளார்- துரை வைகோ அறிக்கை

Published On 2024-05-28 07:49 GMT   |   Update On 2024-05-28 07:50 GMT
  • யாரும் தலைவரை சந்திக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம்.
  • வைகோவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், மறு மலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

சென்னை:

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்தத் தகவலை அறிந்து, முதலமைச்சர் என்னை அழைத்து தலைவர் உடல் நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை தலைவரை அறுவைச் சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவைச் சிகிச்சை முடிந்து 3 நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தலைவர் பற்றி வெளி வரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். யாரும் தலைவரை சந்திக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம்.

வைகோவின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், மறு மலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News