தமிழ்நாடு
அரிசியில் உருவான 3 அங்குல உயர திருவள்ளுவர் சிலை- ஆசிரியர் அசத்தல்
- திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
- ஆசிரியர் தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.
நெல்லை:
உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை வடிவமைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர் சரவணன் என்பவர் திருவள்ளுவருக்கு அரிசியில் சிலை செய்து அசத்தியுள்ளார். அதாவது, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.