தமிழ்நாடு

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2024-12-15 05:18 GMT   |   Update On 2024-12-15 05:30 GMT
  • அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
  • கள ஆய்வுகள் தொடர்பான செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

சென்னை:

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

அதன்படி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

தமிழகம் முழுவதிலும் இருந்து 2523 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 1000 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் இன்றைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொதுக்குழு கூட்ட மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொதுக்குழுவில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

கள ஆய்வுகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News