தொண்டர்களே அதிமுக-வின் பலம்: எடப்பாடி பழனிசாமி
- தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக.
- 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணி வரும் போகும் ஆனால் கொள்கை என்பது நிலையானது.
* தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி அதிமுக.
* பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் பல விமர்சனங்கள் எழுந்தன.
* எந்த கட்சிக்கும் இல்லாத தொண்டர் பலம் அதிமுகவிற்கு உள்ளது.
* உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.
* 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி குறைவான வாக்குகளை பெற்றது.
* பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, சட்டசபை தேர்தல் என்பது வேறு.
* 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வின் வாக்கு சதவீதம் உண்மையில் சரிந்துள்ளது.
* 2014 தேர்தலை ஒப்பிடும்போது பாஜக 1 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை இழந்துள்ளது.
* 2021 தேர்தலில் அதிமுக 34 இடங்களில் குறைந்த வாக்குகளில் தோற்றது.
* 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.
* 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
* அதிமுக-விற்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.
* யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை என்று கூறினார்.