தமிழ்நாடு

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவே `ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது- திருமாவளவன்

Published On 2024-12-15 09:34 GMT   |   Update On 2024-12-15 09:35 GMT
  • புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.
  • எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.

எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அதை சுதந்திரமாக எடுத்த முடிவுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான்.

ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்

இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

Tags:    

Similar News