தமிழ்நாடு

உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Published On 2024-12-15 11:16 GMT   |   Update On 2024-12-15 11:16 GMT
  • 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார்.
  • குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.

இதில், நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

இதனால் குகேஷ்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News