நெருக்கடி கொடுக்க கொடுக்க அதிமுக வளர்ந்து கொண்டே இருக்கும்- எடப்பாடி பழனிசாமி
- திமுக அரசு என்பது விளம்பர அரசாக அமைந்துள்ளது.
- திமுக வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
* அதிமுக ஆட்சி நிறைவுக்கு வரும்போது தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி.
* கொரோனா காலத்தில எந்த திட்டமும் நிறுத்தப்படாமல் செயல்படுத்தப்பட்டது.
* சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் தேவையா?
* திமுக அரசு என்பது விளம்பர அரசாக அமைந்துள்ளது.
* திமுக ஆட்சியில் குழு போட்டால் அந்த திட்டம் அத்தோடு முடிந்துவிட்டது.
* திமுக வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
* குடிமராமத்து திட்டத்தின் மூலம் பல நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன.
* அதிமுக ஆட்சி நிறைவுக்கு வரும்போது தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடி.
* 2026 தேர்தலில் முதலமைச்சர் மக்கள் மத்தியில் பதில் சொல்லியாக வேண்டும்.
* அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
* சொத்து வரி மின் கட்டணம் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
* டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்கி ஊழல் செய்கின்றனர்.
* கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
* நெருக்கடி கொடுக்க கொடுக்க அதிமுக வளர்ந்து கொண்டே இருக்கும்.
* அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டு விட்டது. எழுச்சி தான் வெற்றிக்கு அடிப்படை என்று பேசினார்.