21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்
- மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி.
- பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார்.
மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இன்று மாலை இறுதி ஊர்லம் தொடங்கியது.
இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், முகலிவாக்கம் மின் மயானத்தில் உடலம் அடைந்த பிறகு, ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பிறகு, கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.