விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே.. - இயக்குனர் அமீர்
- விசிக-ல் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம்
- ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து கட்சியின் தலைமை அறிவித்திருந்த நிலையில், கட்சியில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் தொல்,திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், "கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா வி.சி.கவில் இருந்து விலகியது தொடர்பாக இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.