தமிழ்நாடு

வேளாண்மை பட்ஜெட்: சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு

Published On 2025-03-15 10:22 IST   |   Update On 2025-03-15 10:22:00 IST
  • 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
  • உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு.

2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

* டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

* 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.

* டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு.

* தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.

* 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு.

* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும்.

* 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

* சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.

* மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தி 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.

* இயற்கை வேளாண்மையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.

* உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News