தமிழ்நாடு

தன்னைதானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார்- முத்தரசன்

Published On 2025-02-18 20:14 IST   |   Update On 2025-02-18 20:14:00 IST
  • இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
  • வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.

எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?

1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.

இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News