தமிழ்நாடு
தனி ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்- உதயநிதிக்கு அண்ணாமலை சவால்
- திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
- உதயநிதி தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.
சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, " தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்" என்று அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.
காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது ?
இவ்வாறு அவர் கூறினார்.