தமிழ்நாடு

மாணவி மீதான பாலியல் தாக்குதல் விவகாரத்தில் முதல்வர் பதில் அளிக்க வேண்டும் - அண்ணாமலை

Published On 2024-12-25 05:48 GMT   |   Update On 2024-12-25 07:11 GMT
  • அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
  • பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது.

சமூக விரோதிகளுக்கு அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News