Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
- தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றவிட்டது.
- தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
சென்னை:
சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று பாருங்கள்.
தி.மு.க. ஐ.டி. விங்கிற்கு சவால் விடுகிறேன். 24 மணி நேரம் தருகிறேன். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. 2 கட்சிகளும் போடும் டுவீட்டில் எவ்வளவு வித்தியாசம் என்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) கணக்கு பார்ப்போம் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் #GetOutStalin என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க. தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.