தமிழ்நாடு
ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் - கைதானதும் சொன்னதை மறக்கவே மாட்டீங்க
- இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
- கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தூங்க விடாமல் பயணிகள் தொந்தரவு செய்ததாலும் எரிச்சல் அடைந்து ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.