சென்னை வரும் விரைவு ரெயில் சேவையில் மாற்றம்
- மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும்.
- அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் பினாகினி விரைவு ரெயில் பிப்ரவரி 24, 27, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் கூடூா் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கமாக கூடூரில் இருந்து மாலை 4.15-க்கு புறப்பட்டு விஜயவாடா சென்றடையும்.
டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் வருகிற 23, 26, 28 ஆகிய தேதிகளிலும், அகா்தலா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரெயில் வருகிற 22, 25 ஆகிய தேதிகளிலும், திப்ரூகா் - மைசூா் பாகமதி விரைவு ரெயில் வருகிற 25-ந் தேதியும், பாட்னா - பெங்களூரு ஹம்சாபா் விரைவு ரெயில் வருகிற 27-ந் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
ஜசிதிஹ் - பெங்களூரு விரைவு ரெயில் மற்றும் புருலியா - திருநெல்வேலி விரைவு ரெயில் பிப். 28-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம் வழியாக இயக்கப்படும். மேலும், செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி சென்னை எழும்பூா் வழி செல்வதற்குப் பதிலாக கூடூா், ரேணிகுண்டா, மேல்பாக்கம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.