தமிழ்நாடு
சென்னை புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரெயில் சேவை நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது.
இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், சூளுர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.