தமிழ்நாடு
null

பொங்கல் பண்டிகை நாட்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றம்

Published On 2025-01-13 14:57 IST   |   Update On 2025-01-13 15:26:00 IST
  • ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.
  • கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது.

இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வுகள் ஜனவரி 13 முதல் 16 வரை நடக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.

பொங்கல் விழாவுக்காக கேந்திரிய வித்யாலயா தேர்வுத் தேதிகளை மாற்றக்கோரிய எனது கடிதத்திற்கு தரப்பட்டுள்ள பதில்;

கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), சென்னை பிரிவு, பொங்கல் திருவிழா நாட்களில் தேர்வுகள் நடக்காமல் இருக்க தேர்வுத் தேதிகளை மாற்றியமைத்திருக்கிறது.

தேர்வுகள் முதலில் ஜனவரி 13, 2025 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தேதி மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தேன்.

அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் தந்துள்ளது.

கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை விரைவாக செய்த கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு நன்றி. மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News