தமிழ்நாடு
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு
- புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்
- www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு அறிவித்துள்ளது.
www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 15 நாட்களில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.