தமிழ்நாடு
கிறிஸ்துமஸ் பண்டிகை- விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரெயில் இயக்கம்
- சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி இன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
* இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும்.
* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.