தமிழ்நாடு

வட சென்னையை "வளர்ச்சி சென்னையாக" மாற்றி வருகிறோம் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-02-19 11:07 IST   |   Update On 2025-02-19 11:07:00 IST
  • வாக்களிக்க தவறியவர்களுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.
  • தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை புள்ளியந்தோப்பில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

* வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6,400 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

* வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி அடைந்து வருகிறது.

* வடசென்னையில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சி தி.மு.க. ஆட்சி.

* வாக்களிக்க தவறியவர்களுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.

* தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* வாக்குறுதியில் இல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

* புதுமைப் பெண் திட்டம் தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்படாத திட்டம்.

* தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

* காலை உணவு திட்டமும் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை என்றார்.

அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News