தமிழ்நாடு

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

Published On 2025-03-02 12:07 IST   |   Update On 2025-03-02 12:07:00 IST
  • உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
  • உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும்!

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, ஊக்கமளிக்கும் பாராட்டுகளை, கனிவுமிகுந்த சொற்களைத் தெரிவித்த அகில இந்திய அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், கலை உலகத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

இனத்தையும் மொழியையும் காக்க, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்த உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News