உள்ளூர் செய்திகள்

திருமாண 2 மாதத்தில் மனைவியை பழிதீர்க்க கணவன் போட்ட பிளான்... கடைசியில் நடந்த டுவிட்ஸ்

Published On 2025-03-02 11:16 IST   |   Update On 2025-03-02 11:16:00 IST
  • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • மனைவியை பழிவாங்க குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த அவலம்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கருவேப்பிலம்பாடியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் (வயது30). இவரது மனைவி ஷாலினி (26) இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கலையரசன் விஷம் குடித்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஆரம்ப சுகாதரா நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசாரிடம் கலையரசன் அளித்த வாக்குமூலத்தில் மனைவி ஷாலினிக்கு என்னை பிடிக்கவில்லை அவர் வேறொரு வாலிபரை காதலித்து வந்தார். ஷாலினி பெற்றோர் வற்புறுத்தலின் பேரிலே அவர் தன்னை திருமணம் செய்தார். வாலிபர் மீது உள்ள காதலால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தனக்கு கொடுத்து விட்டார் என கூறியிருந்தார்.

ஆனால் போலீசாரின் விசாரணையில் கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் பூச்சி மருத்து கலந்து குடித்தது தெரிய வந்தது.

கடந்த மாதம் 13-ந் கலையரசனுக்கு ஷாலினிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஷாலினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவரை கடந்த 16-ந் தேதி கலையரசன் சமரசம் செய்து அழைத்து வந்துள்ளார்.

தன்னை அசிங்கபடுத்திய மனைவியை பழிவாங்கவே கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததும், கலையரசன் தனது நண்பர்களிடம் மனைவியை கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் என கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கலையரசன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் புதுச்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News