தமிழ்நாடு
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்- இந்திய வானிலை ஆய்வு மையம்
- அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது.
- நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.