தமிழ்நாடு
கல்வி நிதி விவகாரத்தில் அடம் பிடிப்பது யார்? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி
- மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.
- அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை.
சென்னை:
மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மொழிப்போருக்காக பலர் உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு, கல்வி என்பது எங்கள் உரிமை. மும்மொழி கொள்கைக்கு தமிழகம் என்றுமே எதிரானது.
மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம். தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை என்றார்.