தமிழ்நாடு
2026-ல் மீண்டும் திமுக ஆட்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
- வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள்.
- களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்.
தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம் 2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்!
தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.